போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வைபவ்
தெலுங்கில் அறிமுகமாகி 'சரோஜா' படத்தின் மூலம் 2008ல் தமிழில் அறிமுகமானவர் வைபவ். அதன்பிறகு கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி, டமால் டுமீல், கப்பல், மேயாதமான், பெருசு படங்களில் நடித்தார்.
தற்போது அவர் நடிக்கும் படம் 'மாறுவேஷம்'. அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்குகிறார். வியானா ஹீரோயினாக நடிக்கிறார். ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் உள்பட பலர் நடித்துள்ளனர். பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் வைபவ் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீனி கூறும்போது “மிஷ்கின் சாரிடம் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, இந்த படத்தை இயக்கியுள்ளேன். ஒரு குடும்பத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வைபவ் நடிக்கிறார். இது மர்டர் மிஸ்டரி திரில்லர் படம் என்றாலும் ரத்தம், வன்முறை எதுவும் இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும்படியான பேமிலி திரில்லர் கதையாக இருக்கும்” என்றார்.