உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ்ப் படங்களை விட 'தி ஒடிசி'க்கு அதிக தியேட்டர்கள்

தமிழ்ப் படங்களை விட 'தி ஒடிசி'க்கு அதிக தியேட்டர்கள்

ஹாலிவுட் படங்களுக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதிலும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வரும் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவரது இயக்கத்தில், மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்ன ஹதாவே மற்றும் பலர் நடித்துள்ள 'தி ஒடிசி' படம் இன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் வெளியாகிறது. இப்படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழில் இன்று வெளியாகி உள்ள 'அன்பே டயானா, அருள்வான், கண் இமைக்கும் நேரத்தில், நாடோடி கூட்டம்' ஆகிய படங்களில் 'அன்பே டயானா, அருள்வான்' ஆகிய இரண்டு படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

ஆனால், தமிழ்ப் படங்களை விடவும் 'தி ஒடிசி' படம் அதிக அளவிலான தியேட்டர்களிலும், ஆங்கிலத்தில் ஐமேக்ஸ் மற்றும் எபிக் வடிவிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த அகன்ற வடிவில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இன்று தவிர்த்து நாளை, நாளை மறுதினம் விடுமுறை தினம் என்பதாலும் இப்படத்திற்கான முன்பதிவு நன்றாகவே இருக்கிறது. மற்ற தமிழ்ப் படங்களை விடவும் இப்படம் அதிகம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Tetra, New jersy
2026-07-17 17:59:18

வள்ளக்காரன்னா வாய பொளப்பாங்க. காசு கொட்டும்