உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'காஞ்சனா 4' படத்தில் நயன்தாரா நடிப்பது ஏன்?

'காஞ்சனா 4' படத்தில் நயன்தாரா நடிப்பது ஏன்?


தமிழில் நயன்தாரா நடித்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் ஹிட் கொடுத்தாலும் திருமணத்துக்குபின் தமிழில் ஒரு வெற்றி படம் கொடுக்க போராடி வருகிறார். அவர் பெரிதும் நம்பியிருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படம் கிராபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

இந்நிலையில் லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் 'காஞ்சனா 4' படத்தில் அவர் கவுரவ வேடத்தில் வருகிறார். முன்பு லாரன்ஸ் படங்களில் நித்யா மேனன் இப்படி நடித்தார். சரத்குமாரும் மிரட்டினார். அந்த பாணியில் நயன்தாரா வருகிறார். வெயிட்டான ரோல், வெயிட்டான சம்பளம் என்பதால் அந்த கேரக்டருக்கு நயன்தாரா ஓகே சொல்லிவிட்டாராம்.

தன்னை மறந்து இருக்கும் ரசிகர்களுக்கு அந்த கேரக்டர் பேசப்படும் வகையில் இருக்கும் என நம்புகிறாராம். அதேசமயம், கணவர் இயக்கத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை. படப்பிடிப்பு தளத்தில், கதையில் பிரச்னை வரும் என்பதால், கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மட்டும் நடிப்பதில்லை என முடிவு செய்து இருக்கிறாராம். அதேபோல், படம் தயாரிப்பது, பட வினியோகத்தையும் குறைத்துவிட்டாராம். அந்தவகையில் அவருக்கு சில கோடி இழப்பு என்று தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !