உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த ஜெனரேஷன் காதல் மேல பெருசா நம்பிக்கை இல்லை : செல்வராகவன்

இந்த ஜெனரேஷன் காதல் மேல பெருசா நம்பிக்கை இல்லை : செல்வராகவன்

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாகதுர்கா, செல்வராகவன், வனிதா நடிக்கும் படம் லவ் ஓ லவ். இதில் மாமா செல்வராகவனும், மருமகன் பவிசும் இணைந்து நடிக்கிறார்கள். படம் குறித்தும், பவிஷ் குறித்தும் செல்வராகவன் கூறியதாவது...

லவ் ஓ லவ் வெற்றி பெற்றால் எனக்கு கார் பரிசு அளிக்கணும். தனுஷ் கடும் உழைப்பாளி. சும்மா யாருமே அப்படி வந்துட முடியாது. அவரு பயங்கர ஹார்டு வொர்க்கர். 40 அடி மாடியில் இருந்து உருண்டு வருவாரு. எது வேணும்னாலும் பண்ணுவாரு. அந்த குவாலிட்டியை பவிஷ் கிட்டேயும் பார்த்தேன். ஹி இஸ் ஆல்சோ வெரி ஹார்ட் வொர்க்கிங். ஐந்து பக்க டயலாக்கை ஈசியாக பேசுறாரு.

20 வருஷத்துக்கு முன்னாடியே காதலைப் பத்தி படம் எடுத்தேன். இப்போது இருக்கும் Gen-Z காதல் வேறு மாதிரி. ஜி.வி.பிரகாஷ் வைத்து நான் எடுத்த படம் 80% முடிந்து விட்டது. அதில் இந்தக் காலத்து காதலைப் பற்றி என் பார்வையில் சொல்லி இருக்கிறேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு இந்த ஜெனரேஷன் காதல் மேல பெருசா நம்பிக்கை இல்லை. லவ் எப்படி இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்னா, முதல்ல நான் யாரையாவது புதுசா லவ் பண்ணிப் பார்த்துட்டுதான் சொல்லணும். காதலோட பேர்தான் மாறுமே தவிர, காதல் என்றும் அழியாதது என்றார்.

கதறிய தனுஷ்
விழாவில் கஸ்தூரி ராஜா பேசுகையில், என் மகன் செல்வராகவன், என் பேரன் பவிஷ் ஆகியோருடன் ஒரே மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு எங்கள் குடும்பம் வர பட்ட கஷ்டங்களும், இழந்த இழப்புகளும் ஏராளம். எங்கள் குடும்பத்தில் செல்வராகவன் மட்டும்தான் சினிமாவைப் பிடித்து வந்தார். தனுசுக்கு முதலில் சினிமாவே பிடிக்காது. ஐந்து, ஆறு படங்கள் நடிக்கும் வரை, 'என்னை விட்டு விடுங்க நான் போயிடுறேன்' என்று கதறுவார். 'துள்ளுவதோ இளமை' படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் அழுது கொண்டேதான் நடிப்பான். இன்று பெரிய உயரத்தில் இருக்கிறார். பவிஷ் விஸ்காம் படிக்க போகிறேன் என்றார். நம்ம வீட்டில் இயக்குனர் இருக்க அந்த படிப்பு ஏன் என்றேன். அவன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோ ஆகிவிட்டான். அடுத்து இந்த படத்தில் நடிக்கிறார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !