ஞாபக மறதியால் மாற்றி மாற்றி சொல்லிவிட்டேன் : ஜெயராம் ஒப்புதல்
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தான் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்த 'பரிமளா அண்ட் கோ' திரைப்படம் வெளியானது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அதாவது மலையாளத்தில் வெளியான 'ட்வென்டி : 20' படத்தில் ஜெயராம் நடித்தபோது, அந்தச் சமயத்தில் நான் எங்கே இருந்தேன் என்கிற தகவலை அவர் இரண்டு மூன்று பேட்டிகளில் மாற்றி மாற்றி கூறியிருந்தார்.
அதாவது 'ட்வென்டி: 20' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்தபோது தான் ஒரு பேட்டியில் தீபாவளி கொண்டாட சென்றதாக கூறிய அவர், மற்றொரு பேட்டியில் சபரிமலை சென்றதாகக் கூறியிருந்தார். தற்போது அது குறித்த வீடியோ கிளிப்புகளை சோசியல் மீடியாவில் எடுத்துப் போட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த ஜெயராம், 15-20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு என்பதால், அந்தச் சமயத்தில் நான் எங்கு சென்றேன் என்பது இப்போது தெளிவாக நினைவில்லை என்று அவர் கூறினார். வயதாகும்போது ஏற்படும் ஞாபக மறதி காரணமாகவே இவ்வாறு நடந்திருக்கலாம், இதற்காக மக்களைக் குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ள அவர், தான் சொன்னதில் தவறு இருந்ததை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.