உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சேயோன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராஜ் பி.ஷெட்டி

'சேயோன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராஜ் பி.ஷெட்டி


கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ராஜ் பி.ஷெட்டி. ஒரு தயாரிப்பாளராக கடந்த வருடம் இவரது தயாரிப்பில் வெளியான 'சூ பரம் சோ' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. கன்னடத்தைத் தாண்டி மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள ராஜ் பி.ஷெட்டி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்களின் கூட்டணில் பலமாகிறது, கொண்டாட்டம் பெரிதாகிறது என்கிற வார்த்தைகளுடன் தற்போது அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டு அவரது வருகையை உறுதி செய்துள்ளனர். சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !