2026ன் இரண்டாம் பாக ராசியை மாற்றுமா 'கட்டா குஸ்தி 2'
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத் திரைப்படங்கள் சில, நல்ல வெற்றியைப் பெறுவது வழக்கம்தான். ஆனால், இந்த 2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான இரண்டே இரண்டு 2ம் பாகத் திரைப்படங்கள் தோல்வியைத் தான் தழுவின.
ஜனவரி மாதத்தில் வெளிவந்த 'திரௌபதி 2' மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியான 'காளிதாஸ் 2' ஆகிய இரண்டு இரண்டாம் பாகப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அந்த இரண்டு படங்களின் முதல் பாகப் படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றப் படங்கள்.
அந்த ராசியை நாளை மறுநாள் வெளியாக உள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து லாபத்தையும் கொடுத்தது.
செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் மற்றும் பலர் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.