தமிழில் வில்லனாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகர்
தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக இருப்பவர் சுஹாஸ். தெலுங்கு சினிமாவின் விஜய்சேதுபதி என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படுகிறவர். சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கேபிள் ரெட்டி, அனந்தராவ் அட்வென்ஜர்ஸ், படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில இவர் நடித்த 'ஹே பல்வாந்த்' படம் வெளியானது.
இந்த நிலையில் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவரது தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். ஆர்.எஸ் இன்போடையிமெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், மிதுன், பாலசரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதில் சுஹாஸ், படத்தின் வலிமைமிக்க வில்லன் கதாபாத்திரமான 'சாட்டப்புலி'யாக நடிக்கிறார். தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் பின்னணியையும், பாய்மரப் படகுப் பந்தயத்தையும் மையமாகக் கொண்ட 'மண்டாடி' திரைப்படம், செப்டம்பரில் வெளியாகிறது.