உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் அண்ட் வார் படத்தில் ‛96' ஜோடி

லவ் அண்ட் வார் படத்தில் ‛96' ஜோடி

கடந்த 2018ம் ஆண்டில் பிரேம் குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் '96' . இதில் இளம் வயது விஜய் சேதுபதி, த்ரிஷா கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷன் இருவரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. மீண்டும் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் இணைந்து முதன்மை வேடத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தனர். ராஜ்குமார் ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'லவ் அண்ட் வார்' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகர்கள் ஜீவா, ஆர்யா ஆகியோர் தங்களது வலைதளத்தில் வெளியிட்டனர். இளம் காதலர்களின் வாழ்க்கை பின்னணியில் அவர்கள் இடையேயான அன்பு, சண்டை உள்ளிட்டவைகளை முன் வைத்து இப்படம் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !