உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜோவிகா நாயகியாக நடிக்கும் 'பூ காய் கனி'

ஜோவிகா நாயகியாக நடிக்கும் 'பூ காய் கனி'

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. வனிதா நடித்த 'மிஸ்டர் அண்ட் மிசஸ்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது 'பூ காய் கனி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.

இந்த படம் 'ஒரு புளியமரத்தின் கதை' என்ற டேக் லைனுடன் தொடங்கி உள்ளது. வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்குகிறார், தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், கொட்டாச்சி, மானஸ்வி, சூரன், வெங்கி, சாய்பிரியா, வனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !