புதிய ஹேர் ஸ்டைல் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே!
'ஜனநாயகன்' படத்தை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கிய நடித்து வரும் 'காஞ்சனா-4' படத்தில் நடிக்கிறார் பூஜாஹெக்டே. அதையடுத்து துல்கர் சல்மான் தெலுங்கில் நடிக்கும் 41-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர ஹிந்தியிலும் சில படங்களில் கதாநாயகியாக மட்டுமின்றி ரஜினியின் 'கூலி' படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியது போன்று சில படங்களில் சிறப்பு நடனமாடவும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை அவ்வபோது சோசியல் மீடியாவில் கொடுத்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீளமாக இருந்த தன்னுடைய தலைமுடியை ஷாட்டாக கட் பண்ணி உள்ளார். தான் கட் பண்ணி உள்ள தலைமுடியை கைகளால் கோதியபடி அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார் பூஜாஹெக்டே. அவரது இந்த புதிய ஹேர் ஸ்டைலுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.