உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் கார்த்தி!

விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் கார்த்தி!


கடந்த 2021ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் 'சர்தார்'. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர்கள் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 'சர்தார் -2' படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி அறிவித்திருக்கிறார்.

மேலும், கார்த்தி படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ஆந்திரா, தெலுங்கானாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அதேபோல் தெலுங்கில் விஜயதேவரகொண்டா நடித்துள்ள 'ரணபாலி' படம் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகிறது. இதனால் தெலுங்கில் கார்த்தி, விஜய்தேவரகொண்டா படங்களுக்கிடையே பாக்ஸ் ஆபீசில் கடும் போட்டி ஏற்படபோகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !