தியேட்டர் அனுபவத்திற்கு ஏற்ற படம் ‛நாகபந்தம்'
அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடித்த நாகபந்தம் ஜூலை 3ல் ரிலீஸாகிறது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சாமி கோயில், பொக்கிஷம், மர்மம், நாக பந்தம், பிரம்ம கமலம், சிவன் ஆகிய பின்னணியில் இந்த கதை உருவாகிறது.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் தயாரிப்பாளர் தாணு பேசுகையில், ‛‛நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது பிரமாண்டம் கண்ணெதிரே தோன்றியது. நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மிகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. அந்த வகையில், 'நாகபந்தம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் பேசுகையில், ‛‛தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே 'இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்' என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 'நாகபந்தம்' திரைப்படம் நிச்சயமாக இருக்கும். இந்தப் படத்தின் முழுக் கதை எனக்கு தெரியாது. ஆனால் டிரைலர் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவமாக இது இருக்கும் என்று தோன்றுகிறது'' என்றார்.
என்றார்.