உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சலீம் குமாருக்கு ஒரு கோடி மதிப்பில் எர்ணாகுளத்தில் நினைவிடம்

நடிகர் சலீம் குமாருக்கு ஒரு கோடி மதிப்பில் எர்ணாகுளத்தில் நினைவிடம்


மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தேசிய விருது பெற்ற மிகச் சிறந்த குணச்சித்ர நடிகராகவும் கடந்த 35 வருடங்களாக நடித்து வந்த நடிகர் சலீம் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது கலைச் சேவையை கவுரவிக்கும் விதமாக, சமீபத்தில் கேரளாவில் புதிதாக பொறுப்பேற்ற புதிய அரசு, சமீபத்திய பட்ஜெட்டில் சலீம் குமார் நினைவாக எர்ணாகுளத்தில் நினைவிடம் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மேலும் இந்த பட்ஜெட்டில் மலையாள சினிமா துறையை தொழில்துறையாக அங்கீகரித்ததுடன், கேரள திரைப்பட நகரம் அமைக்க 100 கோடி ரூபாய் தொகை ஒதுக்கியுள்ளனர் என்பதும் கொச்சியில் 'சித்ராநகரம்' என்ற பெயரில் ஜே.சி. டேனியல் சர்வதேச திரைப்பட நகரம் அமைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !