உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிமன்றத் தடையை மீறி ஓடிடியில் தெலுங்கு 'திரிஷ்யம் 3' ரிலீஸ்

நீதிமன்றத் தடையை மீறி ஓடிடியில் தெலுங்கு 'திரிஷ்யம் 3' ரிலீஸ்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம் 3' படம் இன்று ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தெலுங்கு மொழி உரிமை குறித்து நடிகை ஸ்ரீப்ரியா அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதியின் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பிற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'திரிஷ்யம் 3' படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேற்கொண்டு உத்தரவு வரும் வரை ஓடிடி தளங்களில் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது என ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் பத்திரிக்கைகளில் செய்தியை நேற்று வெளியிட்டனர்.

இருப்பினும் நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவை மீறி ஓடிடி தளத்தில் 'திரிஷ்யம் 3' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. இதையடுத்து ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் மேல் நடவடிக்கையில் இறங்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !