மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் உபேந்திரா?
ADDED : 7 hours ago
சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' என்ற படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அதை அடுத்து 'இண்டிபெண்டன்ட்' என்ற ஒரு படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார். மதுரை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தபடியாக அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். அவரது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியின் 'கூலி' படத்தில் நடித்த கன்னட நடிகர் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிப்பது வில்லன் வேடமா அல்லது குணச்சித்ர வேடமா என்பது தெரியவில்லை. ஆக்சன் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.