உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்

அரசியல் அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து, திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த வாரங்களில் செய்திகள் வெளியாகின. அது குறித்த அறிவிப்பை ஜுன் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுவதாக சில தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.

இன்று இயக்குனர் பாரதிராஜா மறைந்ததைத் தொடர்ந்து அவரது அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில், “11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு, எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.

அதன்படி, 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்,” எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !