உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாரர் படத்திற்காக பயிற்சி பட்டறைக்கு செல்லும் ஜான்வி கபூர்!

ஹாரர் படத்திற்காக பயிற்சி பட்டறைக்கு செல்லும் ஜான்வி கபூர்!


ராம்சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெத்தி' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக ஒரு ஹாரர் படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தெலுங்கில் வெளியான 'தும்பாட்' என்ற திகில் பேண்டஸி படத்தை இயக்கிய ரஹி அனில் பார்வே என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

விசித்திர உயிரினம் சார்ந்த திகில் கதையில் இப்படம் உருவாகிறது. இந்த திகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஜான்வி கபூர் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு பயிற்சி பட்டறையில் இணைந்து தீவிர பயிற்சியை எடுத்துவிட்டு அதன் பிறகே கேமரா முன்பு வர திட்டமிட்டுள்ளாராம் ஜான்வி கபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !