உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி!

'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி!


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கதை களத்தில் ராமாயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் விதமாக பிரமாண்டமாக காட்சிகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடிக்கும் மேல் என்கிற தகவல் உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டை கருத்தில் கொண்டு ராஜமவுலி ஹைதராபாத்தில் உள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தை சந்தித்து டிஜிட்டல் உரிமையை ஒரு பெரிய தொகையை குறிப்பிட்டு வாங்கி கொள்ள கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், ஹைதராபாத்தில் உள்ள நெட்பிளிக்ஸ் தரப்பினர் இந்த தொகைக்கு வாங்கும் முடிவு எங்களால் எடுக்க முடியாது. இதற்கான அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ் நிறுவனர்கள் தான் எடுக்க முடியும் எனக் கூற இப்போது ராஜமவுலி மற்றும் சிலர் அமெரிக்கா சென்று நெட்பிளிக்ஸ் நிறுவன தரப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !