உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன்

'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன்

கமல்ஹாசனின் அபிமான இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாசராவ். இருவரது கூட்டணியில் “ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பேசப்பட்டன.

94 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் தற்போது தெலுங்கில் இயக்கி முடித்துள்ள படம் 'சிங் கீதம்'. அஹில்யா பம்ரூ, அயான், ஷாலினி கொன்டேபுடி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஜூன் 11ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இப்படம் பற்றி தேவிஸ்ரீ பிரசாத் பேசுகையில், “சிங்கீதம் அவர்களை எப்போதுமே வியந்து பார்ப்பேன். உண்மையில் அவர் ஒரு சாதனையாளர். சில வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம் 'சிங் கீதம்' படத்தைப் பற்றிச் சொன்னார். உடனடியாக அந்தக் கதை என்னைக் கவர்ந்தது.

ஒரு கிராமத்தில் வார்த்தைகளால் பேசாமல் பாடல்களால் பேசும் மக்களைப் பற்றிய கதை இது. ஒவ்வொரு வசனத்தையும் நான் இசையாக மாற்றியுள்ளேன். எனது பயணத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த படம் இது. இப்படத்திற்காக புதிய செயல் திட்டத்தை உருவாக்கினேன்.

சமீபத்தில் கமல்ஹாசன் ஸ்டுடியோவுக்கு வந்து படத்தைப் பார்த்தார். அவர் மிகவும் மகிழ்ந்தார். 'இம்மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருக்க வேண்டும்,' என்று அவர் சொன்னார். அதைக் கேட்டதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது,” என்று தேவி ஸ்ரீ பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !