உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட்

சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட்

ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த படம் 40 கோடியை தாண்டிவிட்டது. 50 கோடியை நெருங்குகிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களில் ஓடிவருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இன்றும், நாளையும் நல்ல வசூல் இருக்கும் என்பதால் அடுத்த வாரம் 50 கோடியை தாண்டி வாய்ப்பு என்று கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குபின் சூர்யாவுக்கு கருப்பு படம் வெற்றி பெற்றது. 300 கோடி வசூலை அள்ளியது. அதேபோல், பல ஆண்டுகளுக்கு பின் அர்ஜூனுக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியால் ஹீரோயினாக நடித்த ப்ரீத்தி முகுந்தனுக்கு தமிழில் ஒரு மார்க்கெட் உருவாகி உள்ளது. அவர் சம்பளமும் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !