உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' ரிலீஸ்: சிக்கலைத் தீர்த்த தெலுங்கு பிலிம் சேம்பர்

'பெத்தி' ரிலீஸ்: சிக்கலைத் தீர்த்த தெலுங்கு பிலிம் சேம்பர்


தெலுங்குத் திரையுலகத்தில் இனி வரும் காலங்களில் சதவீதப் பங்கு அடிப்படையில் மட்டுமே படங்களைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. ஆனால், அதற்கு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள பான் இந்தியா படமான 'பெத்தி' படத்திற்கான வெளியீட்டு சிக்கலை தெலுங்கு பிலிம் சேம்பர் தீர்த்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

ஆந்திர மாநிலத்தில் 'பெத்தி' படத்தின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டால் 7.5 சதவீதம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூடுதலாக வழங்கப்படும்.

பிரிமியர் காட்சிகளுக்கு ஏ சென்டர்களுக்கு 25,000, பி சென்டர்களுக்கு 15,000, சி சென்டர்களுக்கு 10,000 வழங்கப்படும்.

தெலங்கானா மாநிலத்திலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டால் மேற்கண்டவை பொருந்தும். விலை உயர்வு இல்லை என்றால் வழக்கம் போல வினியோகஸ்தர்களுடன் விவாதித்து தீர்வு காணப்படும்.

தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சதவீத முறையை செயல்படுத்த ஒப்புக் கொண்டனர்.

புதிய சதவீத முறை அடுத்த பெரிய படம் வெளியாவதற்கு முன்போ அல்லது மூன்று வாரங்களுக்குள், எது முந்தையதோ அதற்குள் முடிவு செய்யப்படும்.

70 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்த படங்களுக்கு விருப்ப சதவீதம் வழங்கப்படும். மற்ற அனைத்து புதிய படங்களுக்கும் புதிய சதவீத முறை பின்பற்றப்படும்.

இவ்வாறாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !