வாசகர்கள் கருத்துகள் (1)
இப்ப கணவன்மார்கள், நான் என்ன ஜெயம் ரவியா ? என கேட்கும்படி செய்துவிட்டாயே அருன்மொழி வர்மா.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்று அமைதியாக இருந்து விட்டேன் என்றும் கூறினார்.
அது மட்டுமின்றி தனது பிள்ளைகளை கூட பார்க்க விடாமல் அவர் தடுப்பதாகவும் கண்ணீர் விட்டவர், சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதித்த போதும் எனக்கு தனியாக வங்கி கணக்கு கூட கிடையாது என்று கூறிய ரவிமோகன், தான் தற்போது மிகப்பெரிய மன உளைச்சலில் இருப்பதால் விவாகரத்துக்கு பிறகுதான் மீண்டும் படங்களில் நடிப்பேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில் தமிழில், 'அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, காளை' என படங்களில் நிலா என்ற பெயரில் நடித்த நடிகை மீரா சோப்ரா, ரவி மோகனுக்கு ஆதரவாக எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ''ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். தென்னிந்திய படங்களில் நடித்து வந்தபோது அவருடன் பழகியிருக்கிறேன். மேலும் விவாகரத்து என்று வரும்போது ஆண்களை மட்டுமே குறை செல்லக்கூடாது. பல பெண்களும் தவறு செய்கிறார்கள். அதனால் இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தை கேட்டு அறிய வேண்டும். அதோடு ரவி மோகன் ஸ்வீட் பர்சன், ரொம்ப சிம்பிளானவர். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார் மீரா சோப்ரா.
இப்ப கணவன்மார்கள், நான் என்ன ஜெயம் ரவியா ? என கேட்கும்படி செய்துவிட்டாயே அருன்மொழி வர்மா.