இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ்
ADDED : 21 hours ago
'அவள் பெயர் தமிழரசி, விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது இஸ்லாமிய குடும்ப பின்னணியில் 'ஹபீபி' என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2024ம் ஆண்டே வெளியான நிலையில், தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்த ஹபீபி படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் வருகிற மே 28ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்த படம் இஸ்லாமிய காதலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது.