முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா?
நடிகர் ரஜினிகாந்த், நேற்று திடீர் பிரஸ்மீட் வைத்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். தமிழக முதல்வருக்கும் தனக்கும் மனஸ்தாபம், அவர் முதல்வர் ஆனதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பது போல செய்திகள் வருகிறது. நான் அப்படி நினைக்கவில்லை. அவருக்கும் எனக்கும் எந்த போட்டியும், பிரச்னை இல்லை என்பதே அந்த பேட்டியின் உள் அர்த்தம். ஆனாலும், இந்த பிரச்னை நீடிக்க கூடாது, இருவரும் சந்தித்து பேசினால் இந்த மனஸ்தாபம் நீங்கிவிடும் என இருவருக்கும் பொதுவானர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இப்போதைக்கு முதல்வரை தேடி ரஜினி சந்திக்க வாய்ப்பில்லை. ரஜினி வீடு தேடி வந்து முதல்வர் வாழ்த்து பெற்றால் தீர்வு கிடைக்கும். ஆனால், தன்னை சந்திக்க ரஜினி அனுமதி தர வேண்டும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறதாம். ரஜினியை கண்டுகொள்ளாமலும் விட முடியாது. அவர் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதிப்பு, ஆட்சியின் மைனஸ் என அடுத்து பேசினால், அது விவாதப்பொருள் ஆகும். மீடியாவில் பரபரப்பாக பேசப்படும். அதனால், அவரை சந்திப்பது நல்லது என முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.
இந்த சந்திப்பு எப்போது நடக்கும்? யாரால் நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், தவெகவினர் ரஜினியை சோஷியல் மீடியாவில் விமர்சனம் செய்ய வேண்டாம். அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதாம். 'ஜெயிலர் 2' ரிலீஸ், அடுத்து இன்பன் உதயநிதி தயாரிப்பில் நடிக்கும் படம், கமல் தயாரிக்க நடிக்கும் படம் என, ரஜினிக்கும் தமிழக அரசு உதவிகள் தேவையிருப்பதால் அவரும் இதை விரைவில் முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.