உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி

சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி


குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் பிற்காலத்தில் சினிமாவில் ஹீரோயின் ஆவது பல ஆண்டுகளாக நடக்கிறது. பேபி ஷாலினி, பேபி சாரா தொடங்கி பலர் அப்படி மாறியிருக்கிறார்கள். இப்போது காமெடி நடிகர் கொட்டாச்சி மகளும், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான மானஸ்வி, 'பூ காய் கனி' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். 'அரும்புமீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு, விசிறி' படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் அந்த படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக கேசிபி மிதுன்சக்ரவர்த்தி நடிக்கிறார். 'டூலெட்' படத்தில் நடித்த சந்தோஷ்நம்பிராஜன், ராஜூமகாலிங்கம் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

1986ல் நடக்கும் கிராமத்து காதல் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சூரியை கொட்டாச்சி விமர்சிக்க, அது வைரல் ஆனது. பின்னர், ''நான் அப்படி பேசியிருக்க கூடாது. நீங்கள் யாருக்கும் உதவி செய்யவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், பலருக்கு நீங்கள் கல்வி உதவித்தொகை கொடுத்து வருகிறீர்கள். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்'' என்று கொட்டாச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சூரியும், கொட்டாச்சியும் ஆரம்ப கால நண்பர்கள், நிறைய இடங்களில் ஒன்றாக வேலை செய்து இருக்கிறார்கள். தனது மகள் அறிமுக படத்துக்கு ஒரு டுவிட் போட்டு விளம்பரம் செய்து கொடு என கொட்டாச்சி கேட்க, அதற்கு சூரி மறுக்க, ஆரம்ப கால நண்பர்களுக்கு சூரி உதவி செய்வது இல்லை என பொங்கியிருந்தார் கொட்டாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !