உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்…

'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்…


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நாளை மே 14ம் தேதி வெளியாக உள்ள படம் 'கருப்பு'.

இப்படத்தின் வியாபாரம் எவ்வளவுக்கு நடந்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மொத்த வியாபாரம் 70 கோடி வரை நடந்துள்ளது என்கிறார்கள்.

தமிழக உரிமை 40 கோடி, வெளிநாட்டு உரிமை 15 கோடி, கர்நாடகா, கேரளா, வட இந்தியா ஆகிய உரிமைகள் மொத்தமாக சேர்த்து சுமார் 8 கோடி, தெலுங்கு மாநிலங்களின் உரிமை 7 கோடி என 70 கோடிக்கு நடந்துள்ளதாம்.

அவ்வளவு தொகை வியாபாரம் என்பதால் சுமார் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால் மட்டுமே பங்குத் தொகை, இதர செலவுகள் போக லாபம் கிடைக்கும். இது தியேட்டர் வியாபாரம் குறித்தது.

ஆனால், ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை மூலம் தயாரிப்பாளருக்கு நேரடியாக நல்ல வருவாய் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, இசை உரிமை ஆகியவை மூலம் மட்டுமே சுமார் 100 கோடி வரை வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் பட்ஜெட் சுமார் 130 கோடி என்றும் தகவல் இருக்கிறது.

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !