உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம்

டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம்


தெலுங்கானா திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்களாக இருக்கும் பலர் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

“2008ம் ஆண்டு முதல் சதவீதப் பங்கு அடிப்படையிலான திரையிடலுக்கு முயற்சி செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் அப்படி நடக்கின்றன. ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. இனிமேல் அரசு அனுமதித்தாலும் ஒற்றைத் தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்.

சிங்கிள் தியேட்டர்கள் மூடப்பட்டால் திரையுலகம் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போல சிங்கிள் தியேட்டர்களை டெக்னிக்கலாக மாற்றினால் நிறைய பார்வையாளர்கள் வருவார்கள். அதற்கு சதவீத பங்குதான் சரி,” என்று நிர்வாகிகள் பேசினார்கள்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதன் தயாரிப்பாளர்கள் அரசு அனுமதி பெற்று டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவார்கள். அதற்கு இனி அனுமதிக்க மாட்டோம் என இவர்கள் கூறியிருப்பது பெரிய படங்களுக்கும், முன்னணி நடிகர்களுக்கும் மிகவும் சிக்கலாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !