உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும்

மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும்


நடிகை மஞ்சு வாரியர் சில வருடங்களுக்கு முன்பு வரை இருசக்கர வாகனம் கூட ஓட்டத் தெரியாமல் இருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தில் ஜோடியாக நடித்தபோது அவருக்கு பைக் ஓட்டுவது குறித்த நுணுக்கங்களை அஜித் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு மஞ்சு வாரியார் லைசென்ஸ் பெற்று தனியாகவே புல்லட் ஓட்டும் அளவிற்குத் திறமை பெற்று விட்டார். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அவர் குதிரையேற்றப் பயிற்சி மேற்கொண்டு வந்த விஷயமும் தற்போது வெளியே கசிந்துள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலுவாவுக்கு தினசரி காலை தனது ஸ்கூட்டியிலேயே பயணித்த மஞ்சு வாரியர், அங்கே தினசரி குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். 'லாரா' என்கிற குதிரையின் மூலமாக ஜார்ஜ் டயர்ஸ் என்பவர் மஞ்சு வாரியருக்குப் பயிற்சி அளித்தார். ஒரு வாரத்திலேயே குதிரையேற்றத்தைப் பிக்கப் செய்து கொண்ட மஞ்சு வாரியர் இப்போது தனி ஆளாக குதிரை ஓட்டும் அளவிற்குத் தேர்ச்சி பெற்று விட்டார்.

நடிகர்கள் சன்னி வெய்ன், சிஜூ வில்சன் போன்றவர்களும் இந்தப் பயிற்சியில் உடன் ஈடுபட்டதால், இது அடுத்து மஞ்சு வாரியர் நடிக்கும் ஒரு படத்திற்காக எடுத்துக்கொண்ட பயிற்சி என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இப்படி மஞ்சு வாரியர் ஒரு மாத காலமாக இந்தப் பயிற்சிக்கு வந்து சென்றாலும், அதிகாலை நேரம் என்பதால் அங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கூட அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !