உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய்

சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய்


தமிழக முதல்வராக நடிகர் விஜய் இன்று (மே 10) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், முதல்வர், தம்பி விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
வாழ்த்துக்கள் முதல்வர் விஜய் சார்!! முதல்வர் விஜய் சார் மற்றும் அவரது முழு குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை வழங்க வாழ்த்துகிறோம்.

இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்!!! இது நம்ப முடியாததாக இருக்கிறது ..!!! உங்களுக்கும் உங்கள் அமைச்சரவைக்கும் வாழ்த்துகள்…!!! உங்களையும் உங்கள் நோக்கங்களையும் அறிந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு நமது பெருமைமிக்க மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன் !!! உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் !!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சி.ஜோசப் விஜய் எனும் நான்!! புதிய சகாப்தம் தொடங்குகிறது.

நடிகை சிம்ரன்
என் அன்பு நண்பரும், மக்கள் தலைவரும், உண்மையான ஜனநாயகனுமான விஜய், தமிழக முதல்வராகப் பதவியேற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் மட்டுமல்ல, இது ஒரு சக்திவாய்ந்த புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

நடிகர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கும், அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய அரசு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, வெளிப்படையான மற்றும் முற்போக்கான ஆட்சியை உறுதிசெய்து, தமிழகத்தை மேலும் வளர்ச்சி மற்றும் செழிப்பின் பாதையில் வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.

நடிகர் பிரபுதேவா
அற்புத மனிதர்! முதல்வருக்கு வாழ்த்துகள்!

நடிகை நக்மா
இறுதியாக!!! வாழ்த்துகள் தமிழக முதல்வர் விஜய். தயவுசெய்து மக்களுக்காகப் பணியாற்றி, மிகுந்த பணிவுடன் அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

நடிகர் அருண் விஜய்
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள், நண்பா விஜய். உங்கள் இந்தப் புதிய பயணத்திற்காக ராகவேந்திர சுவாமியைப் பிரார்த்திக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !