சமந்தாவின் ஆக்சன் அவதாரம் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்!- ராஜ் நிடிமொரு தகவல்
வெப்சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட பிறகு சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. நந்தினி ரெட்டி இயக்கி உள்ள இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் சமந்தா.
இந்நிலையில் இந்த படம் குறித்து ராஜ் நிடிமொரு கூறுகையில், ''மா இண்டி பங்காரம் படத்தில் உள்ள ஆக்சன் காட்சிகள் சமந்தாவின் மூர்க்கத்தமான அதிரடியான பக்கத்தை வெளிப்படுத்தும். இப்படத்தில் தனது எல்லைகளை தாண்டி எதார்த்தமான ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் சமந்தா. இந்த கதாபாத்திரத்துக்காக தன்னை முழுமையாக தயார்படுத்தியுள்ள அவர், தனது உடலை வருத்தி நடித்ததோடு பல ஆக்சன் காட்சிகளில் துணிச்சலான ஷாட்டுகளில் நடித்துள்ளார். இது சமந்தாவுக்கு என்று திரை உலகில் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கும்'' என்று அவர் கூறியிருக்கிறார்.
மா இண்டி பங்காரம் படம் மே 15ல் ரிலீசாகும் என அறிவித்த நிலையில், அந்த தேதியில் இருந்து தள்ளிப்போகும் என்கின்றனர்.