'கருப்பு' படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது? ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவு
'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் 'கருப்பு'. அவருடன் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மே 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.
அதையடுத்து பாடல்களும் வெளியாகி வருகிறது. தற்போது கருப்பு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கருப்பு படத்தின் டிரைலர் தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளார்.