'கர' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
ADDED : 109 days ago
நடிகர் தனுஷ் தற்போது 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இன்று இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது என்பது கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.