sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : ரிஷபம்
12 ஜன 2024

முந்தய மாத ராசி பலன்

rasi

ரிஷபம்கார்த்திகை 2,3,4 ம் பாதம்: ஆற்றல் காரகனான சூரியன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற மாதமாக இருக்கும். நீங்கள் நினைப்பதை நடத்திக் கொள்வீர்கள். ரகசிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஆதாயம் அடைவீர்கள். லாப ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருந்த தடைகள் விலகும். தைரியமாக செயல்படுவீர்கள். வருவாயை வைத்து மற்றவர்களுக்கு உதவிகளும் செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தான சனியால் தொழிலில் அதிகபட்சமான அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நிலைமை உண்டாகும். தம்பதியருக்கிடையே சுமூகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகள் செயல்களில் தொய்வு ஏற்படும் என்றாலும் நினைத்தது நிறைவேறும். கலைஞர்களின் செல்வாக்கு உயரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். வெளிநாட்டிற்கு சென்றுவரும் யோகம் சிலருக்கு ஏற்படும். பெண்கள் இக்காலத்தில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். விளைபொருட்களுக்கு லாபம் அதிகரிக்கும். விரய குருவால் செலவுகள் தோன்றினாலும் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு உயரும். மாணவர்கள்  ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 6.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,19,24,28, பிப்.1,6,10.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

ரோகிணி: மனக்காரகனான சந்திரன், கலைக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதத்தில் ஆசைகள் அதிகரிக்கும். வருமானத்தின் மீது நாட்டம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கைக்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளைப் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். அவர்களுக்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். தம்பதியருக்குள் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் நட்புகளிடம் கவனமாக இருப்பது அவசியம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் திறமை மதிக்கப்படும். உத்தியோகத்திற்காக முயற்சித்து வந்தவர்களின் செயல் வெற்றியாகும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் நினைத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தலைமையிடம் சாதகமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு புதிய பாதை தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 7.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,20,24,29, பிப். 2,6,11.
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு வெள்ளை அல்லியை சார்த்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.

மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், பராக்கிரமக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, மாதத்தின் முற்பகுதியில் அறிவாற்றல் மேம்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வந்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு உங்கள் செயல்களை வெற்றியாக்கும். முயற்சிகளை லாபமாக்கும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். பணியாளர்கள் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் தனித்திறமை இப்போது வெளிப்படும். தம்பதியருக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ரகசியங்களை மற்றவரிடம் கூறாமல் இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு நன்மையாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். போட்டியாளர்களால் சங்கடம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விற்பனையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: பிப். 8.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,18,24,27, பிப். 6,9.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் தீரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us