sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

மிதுனம்

/

மிதுனம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மிதுனம்
22 ஏப் 2023 to 21 ஏப் 2024

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம்மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது நடசத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட நீங்கள் எடுத்துக் கொண்ட காரியங்களை வேகமாக செய்து முடிக்கும் திறன் உடையவர்கள். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது அவசியம்.  
இந்த குருபெயர்ச்சியால் சுபவிஷயங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும்.  ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். கவலை நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலருக்கு வாழ்க்கைத்தரம் உயரும்.  நட்சத்திராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக வியாபாரிகளுடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பர். மேல் அதிகாரிகளின் பாராட்டும் பரிசும் கிடைக்கப் பெறுவார்கள். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு,  வாக்குவாதங்கள் ஏற்படலாம். வரவுக்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும். வருங்காலத்திற்குத் தேவையான சேமிப்பிலும் அக்கறை கொள்வது நல்லது.
 
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உறவினர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தக்க சமயத்தில் கிடைக்கும்.  கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். திட்டமிட்ட செயல்களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வருமானம்  திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். வாகன பயணத்தில் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி தரும் காலகட்டம் இது. தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். வெளியூர், வெளிநாடு  பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட தொண்டர்கள் வகையில் கூடுதல் செலவு ஏற்படலாம்.  
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். தோழிகள், உறவினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம்.  பணவரவு எதிர்பார்த்தபடி  இருக்கும்.
மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற கூடுதல் நேரம் படிப்பர். கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் உதவி கிடைக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால்  நன்மை உண்டாகும்.

பரிகாரம்:  கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பணி நிலைக்கும்.

திருவாதிரை: பிள்ளைகளால் பெருமை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின்  முதல் பாதத்திற்கு மாறுகிறார். புதன் - ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும் தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும்.
இந்த குருபெயர்ச்சியில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனம் மகிழும் நல்ல சம்பவங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் மனதிற்கு   சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் தாமதமானாலும் முடிவில் உங்களுக்கே வந்து சேரும். புதிய தொழில் தொடங்குவதற்கான காலம் கனியும். ஆர்வமுடன் அதற்கான ஆயத்தப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.  குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதே நேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை சந்திக்கலாம். மற்றவர்களின் பொறுப்புகளையும் சேர்த்து கவனிக்க வேண்டி இருக்கும்.  உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. கோபத்தை விட்டு விட்டு இதமாக பேசுவதன் மூலம் குடும்ப அமைதி கெடாமல் பாதுகாக்கலாம். பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு மூலம் பெருமை காண்பீ்ர்கள்.   
கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். ஆனாலும் பதிலடி கொடுக்க தவற மாட்டீர்கள். திட்டமிட்டு எதையும் செய்து காரிய அனுகூலம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டி வரலாம். சிலருக்கு வீண் செலவு, வீண் அலைச்சல் ஏற்படலாம்.
அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவால் நன்மை உண்டாகும். கட்சியில் பொறுப்பு, பதவி வகிப்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். அரசியல் பணியோடு தொழிலிலும் நல்ல வருமானம் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்பில் வெற்றி பெறும் காலமிது. உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள். அடுத்தவர்கள் கடனுக்கு ஜாமின் பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பணிகளை காரணமின்றி தாமதப்படுத்த வேண்டாம். பணிபுரியும்  தொழில் செய்யும் பெண்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். தொழிலில் லாபம் பன்மடங்கு பெருகும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து படிப்பீர்கள். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.
பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

புனர்பூசம்: ஆடை, ஆபரண சேர்க்கை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவை நட்சத்திராதிபதியாகக் கொண்ட நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த குருப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை சிறப்பாக இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள், திடீர் கோபம் ஏற்படலாம். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிருப்தியை தரும்.
பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழிலாளர்களின் விசுவாசம், ஒத்துழைப்பை பெற்று மகிழ்வீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். சிலருக்கு குறுக்குவழியில் சம்பாதிக்கும் எண்ணம் உண்டாகலாம் கவனம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் கிடைக்கும். நிர்வாகத்தினரின் கருணையால் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். சிலர் விருப்பம் இல்லாத பணிமாற்றம், இடமாற்றத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உருவானாலும் வந்த வேகத்தில் காணாமல் போகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு வீண்அலைச்சல், மன உளைச்சல் ஏற்படலாம். அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். எனினும் அதை வெளியில் சொல்லாமல் கடமையில் கவனம் செலுத்துவர்.   எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். கவுரவத்திற்காக செலவும் செய்யும் கட்டாயம் வரலாம்.
அரசியல்வாதிகள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பணம் வந்து குவியும். கட்சி தலைமை அல்லது தொண்டர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொலை துார தகவல்கள் நல்லவையாக இருக்கும்.   விசுவாசிகளின் செயல்பாட்டால் மனதில் அமைதி பிறக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். டென்ஷனை குறைத்து வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது அவசியம். சிலர் சகமாணவர்களால் வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு, பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us