
* மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளின் முன் தியானத்தில் ஆழ்ந்திருங்கள். இதனால் மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வு மறைந்து விடும்.
* ஒருவரையும் தாழ்வாக நடத்துவது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை பழித்த பாவம் நம்மைச் சேர்ந்து விடும்.
* பக்தி என்பது உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே, நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த உணவு.
* அதிகாலையே கண்விழித்து உங்கள் பணியைத் தொடங்குங்கள். அதனால், நம் வாழ்வு நலமாக அமையும்.
* கடவுளின் ஆற்றல் மின்சக்தி போன்றது. நாம் பல்பு போன்றவர்கள். உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொறுத்து, ஒளி வெளிப்படுகிறது.
* சம்பாதிப்பதை எதிர்காலம் கருதி சேமிப்பது போல, ஏழை எளியவர்க்கு தர்மம் செய்வதும் கடமை.
* உடம்பு நிலையானது அல்ல. வயது ஏற ஏற அதன் நிலையற்ற தன்மை வெளிப்படுகிறது. இதை உணர்ந்த மனிதன், பிறருக்கு சேவை செய்வதில் மனநிறைவு கொள்வான்.
- சாய்பாபா