ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம்.
* எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம்.
* ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும்.
* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும்.
* வாழ்க்கை நாணயம் போன்றது. இன்பம், துன்பம் இரண்டு பக்கங்களையும் அதில் யாராலும் தவிர்க்க முடியாது.
* மனிதன் சுயகட்டுப்பாட்டை இழந்து விட்டால், பண்பாடு சிதைந்து மிருகமாக மாறி விடுவான்.
* பெற்றோரை மதித்து நன்றி காட்டுங்கள். அவ்வாறு நன்றி காட்ட மறந்தால், வாழ்வு அர்த்தமற்றதாகி விடும்.
- சாய்பாபா