ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

* கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்காக ஏங்கி நிற்பதை விட நம் முன் வாழும் தெய்வமான தாயை மதியுங்கள்.
* வாழ்வில் எத்தகைய பிரச்னை நேர்ந்தாலும் கவலை கொள்வது கூடாது. கடவுளின் பொறுப்பில் உங்களை முழுமையாக ஒப்படையுங்கள்.
* கடவுள் உங்களுக்கென்று வழங்கியிருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
* தொடக்கத்தில் யாராலும் பற்றற்ற நிலையில் சேவை செய்ய முடியாது. ஆனால், நாளடைவில் தன்னலமற்ற சேவையாற்றும் மனப்பான்மை படிப்படியாக உருவாகும். அதைவிட மகிழ்ச்சி வேறில்லை.
* ஏமாற்றமோ, துன்பமோ ஏற்பட்டால் நம்பிக்கை இழக்காதீர்கள். கடவுளின் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும் என்று திடமான நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள்.
* தர்மத்தின் பிறப்பிடம் இதயம். இதயத்தில் தோன்றும் தூய சிந்தனை செயல் வடிவம் பெறும்போது, தர்மம் எனப்படுகிறது.
- சாய்பாபா