ADDED : ஜூலை 09, 2013 01:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதிலிருக்கும் மிருக உணர்ச்சியைத் தூக்கி எறியுங்கள். தெய்வீக உணர்வுகளை நிரப்புங்கள்.
* உங்களின் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை உற்று நோக்குங்கள். நல்லவற்றில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள்.
* தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். தடைகள் குறுக்கிடும்போது கற்பாறை போல அசையாமல் நிமிர்ந்து நில்லுங்கள்.
* ஒழுக்கத்திற்கு அடிப்படை தூய மனமே. தூய மனம் கொண்டவனை இறைவனே வலிய வந்து ஆட்கொள்கிறான்.
* ஆணவ எண்ணத்தை அடியோடு புறக்கணித்து கடவுளின் திருவடிகளைச் சரணடைந்தால் வாழ்வு பயன் பெறும்.
* உன் மீதுள்ள குறைகளை திருத்திக் கொள். அடுத்தவரிடம் இருக்கும் குணங்களையும் தேடி பாராட்ட முயற்சி செய்.
* வெறுப்பு, பயம், அறியாமை, எதிர்பார்ப்பு போன்ற குணங்கள் நம்மை விட்டு அடியோடு நீங்கட்டும்.
- சாய்பாபா