ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

* அன்றன்று சாப்பிட்ட உணவு அன்றன்றே ஜீரணமாவது அவசியம். அதுபோல, ஒவ்வொரு நாளும் கேட்ட நல்ல சிந்தனைகளை அன்றன்றே உள்வாங்கி நடைமுறைப்படுத்துவது அவசியம்.
* வாழ்வில் கஷ்டநஷ்டத்தையே சிந்தித்து கொண்டிருப்பது கூடாது. கவலையை விடுத்து முயற்சிப்பவனே முன்னேற்றம் காண்பான்.
* உண்ணும் உணவு சுத்தமாகவும், நல்லெண்ணத்துடன் சமைத்ததாகவும் இருக்க வேண்டும். பரிமாறும் இடமும் சுத்தமாக இருப்பது அவசியம்.
* செயலில் அரைமனதுடன் ஈடுபடுவது கூடாது. பாய்ந்தோடும் வெள்ளம் போல, முழுவீச்சுடன் இறங்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
* வேண்டியதெல்லாம் தருவதற்காகவே கடவுள் இருக்கிறார். ஆனால், கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம் கடவுளை அறிவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
* பிறர் தீமையே செய்தாலும் பதிலுக்கு நன்மை செய்யுங்கள். நல்லவனைக் காப்பாற்ற வேண்டியது கடவுளின் பொறுப்பு.
- சாய்பாபா