ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

* இது தான் வாழ்க்கை என்று மிருகங்களுக்கு தெரிவதில்லை. மனிதனும் அதைப் போல வாழ்ந்தால், நிச்சயமாக அவன் மிருகத்தை விட சிறந்தவனாக இருக்க முடியாது.
* சட்டத்தை வடிவமைத்தவர்களே அதற்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். சட்டத்தை நிர்வகிப்பவர்கள் மதிப்பளித்தால் தான் மற்றவர்களும் மதிப்பர்.
* கடவுளின் வெகுமதியான மனிதப் பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பெரும்பாவம் செய்தவராகி விடுவோம்.
* உடல் படகு போன்றது. பிறவி என்னும் ஆற்றைக் கடந்து செல்ல படகின் உதவி தேவை. அந்தப் படகில் ஓட்டை விழாமல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்.
* உள்ளத்தில் கடவுளை நிலைநிறுத்துங்கள். நல்லுணர்வு என்னும் மலர்களால் அவரை அழகுபடுத்துங்கள். நற்செயல் என்னும் கனிகளை அர்ப்பணியுங்கள்.
* அடுத்தவர்களிடமுள்ள குறைகளை மட்டும் தேடி அலையாதீர்கள். அவர்களின் நற்குணங்களைப் பாராட்ட முன்வாருங்கள்.
- சாய்பாபா