நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார் - பாடல் - 215
நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார் - பாடல் - 215
ADDED : டிச 03, 2010 03:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே! சப்பாணி.
பொருள்: உலகுக்கெல்லாம் தந்தையாகிய உன் சமாதானப் பேச்சை மனதில் ஏற்றுக் கொள்ளாமல், கவுரவர்கள் போர் செய்வதற்காகக்களம் புகுந்தனர். தாங்களே அரசு முழுவதையும் வைத்துக் கொள்ள திட்டமிட்டனர். ஆனால், தர்மத்தைக் காக்க, அர்ச்சுனனுக்கு சாரதியாய் இருந்து தேரோட்டிய கைகளால் சப்பாணி கொட்டியருள்க. தேவகி வயிற்றில் பிறந்த சிங்கமே! சப்பாணி கொட்டியருள்க.
குறிப்பு: ஒன்பது மாதக் குழந்தைகள், இருகைகளையும் தட்டி விளையாடுவதை சப்பாணி என்பர்.

