ADDED : டிச 03, 2010 03:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. அதில் சில பெயர்களைத் தந்து அவற்றுக்கான பொருளும் இடம்பெற்றுள்ளன. பொருள் உணர்ந்து சொல்லி மகிழுங்கள்.
முருகன்- அழகு பொருந்தியவன்
குகன்- இதயக்குகையில் குடியிருப்பவன், பாதுகாப்பவன்
கார்த்திகேயன்- கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்
கந்தன்- சேர்க்கப்பட்டவன்
வேலன்- வெற்றியுடையவன், தலைவன்
சாமி- எல்லாம் உடையவன், உயர்ந்தவன்
சரவணபவன்- நாணல் காட்டில் வளர்ந்தவன்
கடம்பன்- கடப்பமலர் மாலை அணிந்தவன்
விசாகன்- விசாக நாளில் அவதரித்தவன்
காங்கேயன்- கங்கை நதியில் பிறந்தவன்
குமரன்- இளமை உடையவன்.

