
கிஷ்கிந்தை மன்னரான வாலி வழிபாடு செய்த சிவன் கோயில் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் உள்ளது. நட்சத்திர பரிகார கோயிலான இங்கு பிறந்த நட்சத்திரத்தன்று வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். இங்கு வாலிக்கு தனி சன்னதி உள்ளது.
கோயிலின் முகப்பில் உள்ள ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. சுற்றிலும் மரங்கள் உள்ளதால் இப்பகுதி பசுமையாக உள்ளது. 27 நட்சத்திரத்திற்கு உரிய மரங்கள் இங்குள்ளன. கிரக தோஷம் தீர பிறந்த நட்சத்திரத்தன்று அவரவருக்குரிய மரத்திற்கு அர்ச்சனை செய்வதோடு மூன்று முறை சுற்றி வருகின்றனர்.
கருவறையில் திருவாலீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் கிழக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு இடது புறத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. கருவறை மண்டபத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை சன்னதிகள் உள்ளன. இங்குள்ள மகாவில்வ மரத்தில் இலைகள் 7, 11 எண்ணிக்கையில் உள்ளன. இந்த மரத்தின் இலைகளால் தான் சிவபூஜை செய்தார் வாலி.
ஞாயிறன்று மூலவர் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் உடல்நலம் சிறக்கும். தலவிருட்சம் மகிழ மரம். சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலின் தீர்த்தம் வாலி தீர்த்தம். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விதமாக அருகிலுள்ள வைகுண்டவாச பெருமாள் கோயிலை நோக்கியபடி வாலீஸ்வரர் இருக்கிறார்.
எப்படி செல்வது: மீஞ்சூர் - பழவேற்காடு வழியில் 10 கி.மீ.,
விசேஷ நாள்: சனிபிரதோஷம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 63810 61883
அருகிலுள்ள கோயில்: நெய்தவாயல் அக்னீஸ்வரர் 13 கி.மீ., (சூரிய தோஷம் நீங்க...)
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 63817 42120, 92834 00969