/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் சித்திரை திருநாள் கொண்டாட்டம்
/
கத்தாரில் சித்திரை திருநாள் கொண்டாட்டம்
மே 01, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தார் தமிழர் சங்கம் பெருமையுடன் வழங்கிய சித்திரை திருநாள் இசை மேடைக் கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 25ம் தேதி மாலை 6 மணிக்கு கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கத்தாருக்கான இந்திய தூதர் விபுல், சிறப்பு விருந்தினர்களாக கத்தார் நாட்டின் உயர் அதிகாரிகள், கத்தாரில் உள்ள முக்கியஸ்தர்கள், கத்தாரில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இந்திய கலைஞர்களான ஸ்ரீ நிஷா, பிரியா ஜெர்சன், திவாகர், ஸ்ரீதர் சேனா, மணி அண்ட் பேண்ட் குழுவினர், பாலா, கார்த்திக் தேவராஜன், வினோத், விக்னேஷ் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டத்தினை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியை பார்வையிட ஏராளமான இந்திய மற்றும் இலங்கை தமிழ் மக்கள் என 2500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்
Advertisement