/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
மியூனிச் - - ஜெர்மனியில் குரு பிரவேச நிகழ்ச்சி
/
மியூனிச் - - ஜெர்மனியில் குரு பிரவேச நிகழ்ச்சி
செப் 14, 2024

ஜெர்மனியில் ஆகஸ்டு 27 ஆம் தேதியிலிருந்து அருள் உலா மேற்கொண்டு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஏக்கத்தோடு காத்திருக்கும் தமது சீடர்கள் இல்லங்களுக்கும் விஜயம் செய்து நல்லருளாசி வழங்கி மகிழ்வித்து வருகிறார்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குரு உரு சிந்தித்தல்தாமே எனத் திருமந்திரம் செப்புகிறது. பூரண கும்ப மரியாதை செலுத்தி, பூச்செண்டு வழங்கி சற்குருவின் திருமேனி கண்டும், திருநாமம் செப்பியும், திருவார்த்தை கேட்டும், குரு உரு சிந்தித்தும் ஜெர்மனி சீடர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்து வருகின்றனர்.
கண்களுக்குப் புலப்படாத ஆன்மாவே குருவாக அமைந்துள்ளது. உலக மக்களின் உன்னதப் பொது மறையான திருமந்திரம் குரு எனும் சொல் நிறச் செம்மையைக் குறிக்கும் எனச் செப்புகிறது. குருவும் கெழுவும் நிறனாகும்மே எனத் தொல்காப்பியம் பகருகிறது. குருவே சிவமெனக் கூறினன் நந்தி. எல்லாம் உடையான் குருவாகி ஈங்கு எமது அல்லல் அறுத்தான் அவன் திருத்தாள் தொழுவோம் எனச் சீடர்கள் கூடி நின்றனர்.
செப்டம்பர் 9 ஆம் தேதி ஞானாசிரியர் ஜெயப் பிரகாஷ், ஸ்விட்ஸர்லாந்து உலக சமாதான ஆலயத் தலைவர் ஞானேஷ்குமார், சற்குணன், மயூரன் முதலியோர் இல்லங்களுக்கு சற்குரு எழுந்தருளினார். எங்கே மெய்யன்பருளர் அங்கே நலந்தர எழுந்தருளும் வண்மைப் பதத்தைத் தொழுது வணங்கிய சீடர்கட்கு எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இறங்கி ஈந்தருளும் திருவடி கொண்ட சற்குரு தம் நல்லருளாசியை வாரி வழங்கியமை மெய் சிலிர்க்க வைத்த காட்சிகளாகும்.
இவை மட்டுமன்று, அகதவ சிறப்புப் பயிற்சியையும் நல்கவுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement