PUBLISHED ON : பிப் 19, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஷாவ்மி' நிறுவனம், அதன் சமீபத்திய 'ஸ்ட்ரீமிங்' சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 'டால்பி விஷன், டால்பி அட்மோஸ்' வசதிகளுடன் இந்த 'டிவி ஸ்டிக்' வந்துள்ளது. இதில் 'குரோம்காஸ்ட்' இணைப்பு வசதி 'இன்பில்ட்' ஆக கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 டிசம்பரில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது.
இதில் 8 ஜி.பி., சேமிப்பு வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் செயல்படுகிறது. 'யுடியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்றவற்றுக்கு ரிமோட்டில் பிரத்யேக பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
விலை: 4,999 ரூபாய்

