PUBLISHED ON : பிப் 26, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பெப்பிள்' நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்பெக்ட்ரா புரோ, விஷன்' எனும் பெயர்களில் இந்த வாட்சுகள் அறிமுகம் ஆகியுள்ளன. நல்ல வடிவமைப்பு, சகாயமான விலை ஆகியவை இவற்றின் சிறப்பாக அமைந்துள்ளன.
ஸ்பெக்ட்ரா புரோ வட்ட வடிவ டயலுடனும், விஷன் சதுர வடிவிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. விஷன் 2.05 அங்குல எச்.டி., திரையுடனும், ஸ்பெக்ட்ரா புரோ 1.43 அங்குல 'ஆல்வேஸ் ஆன் அமோல்டு' திரையுடனும் வந்துள்ளன.
இரண்டிலும் 'புளூடூத் காலிங்' வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. 7 நாட்கள் வரை தாங்கும் வகையில் இவற்றின் பேட்டரி திறன் உள்ளது.
விலை:
பெப்பிள் ஸ்பெக்ட்ரா புரோ: 4,999 ரூபாய்
பெப்பிள் விஷன்: 3,599 ரூபாய்

