sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

ஊட்டி... இப்போது தென்னகத்தின் காஷ்மீர்!

/

ஊட்டி... இப்போது தென்னகத்தின் காஷ்மீர்!

ஊட்டி... இப்போது தென்னகத்தின் காஷ்மீர்!

ஊட்டி... இப்போது தென்னகத்தின் காஷ்மீர்!


PUBLISHED ON : டிச 25, 2025 08:15 PM

Google News

PUBLISHED ON : டிச 25, 2025 08:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்துவிட்டாலே மலைகளின் அரசியான ஊட்டி ஒருவித நிசப்தத்திற்குள் சென்றுவிடும். ஊசிப்போலத் துளைக்கும் குளிருக்கு பயந்து சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, ஊரே வெறிச்சோடிப் போயிருக்கும். ஆனால், இந்த ஆண்டு நிலைமையே வேறு! கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போல, இப்போது இந்த உறையவைக்கும் குளிரிலும் ஊட்டி களைகட்டியிருக்கிறது.Image 1513021தற்போது ஊட்டியில் நிலவும் குளிர் சாதாரணமானதல்ல. உள்ளூர் மக்களே அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர். ஆங்காங்கே தெருக்களில் நெருப்பு மூட்டி (Campfire) குளிர்காய்வதே ஊட்டியின் அன்றாடக் காட்சியாக மாறியுள்ளது.Image 1513022எத்தனை அடுக்குக் கம்பளி ஆடைகள் அணிந்தாலும் குளிர் எலும்பைத் துளைக்கிறது. சாலையில் தெரிந்தவர்களைப் பார்த்தால் 'வணக்கம்' சொல்லவோ, நண்பர்களைப் பார்த்தால் 'கை குலுக்கவோ' கூட யாரும் கையை சட்டைப் பையை விட்டு வெளியே எடுப்பதில்லை. 'கையை வெளியே எடுத்தால் விரல்கள் அப்படியே விறைத்துப் போய்விடுமோ' என்கிற பயம் கலந்த ஜாக்கிரதை உணர்வு அனைவரிடமும் உள்ளது.Image 1513023'காஷ்மீர் வரை போய் எதற்குப் பனியைப் பார்க்க வேண்டும்? இதோ நம்ம ஊட்டியிலேயே பனிப்பொழிவு இருக்கிறதே!' என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் கார்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.Image 1513024குறிப்பாக, ஊட்டியில் உள்ள தலைகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் மிக அதிகம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊட்டியில் இவ்வளவு அடர்த்தியான உறைபனி (Frost) காணப்படுகிறது. அதிகாலை 6 மணிக்கே தலைகுந்தா பகுதிக்குச் சென்றால், அங்கு புல்வெளிகள் அனைத்தும் வெள்ளை மெத்தை விரித்தது போலக் காட்சியளிக்கின்றன.Image 1513025சுவாரஸ்யமான காட்சி: காலையில் எழுந்ததும் கார்களின் மேல்புறம், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகளின் மீது ஐஸ் கட்டிகள் படிந்திருப்பதைப் பார்ப்பது ஏதோ ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற உணர்வைத் தருகிறது. இந்தப் பனிப்போர்வையைத் தங்கள் கேமராக்களில் சிறைபிடிக்கப் பனிப்பொழிவுக்கு முன்பே சுற்றுலாப் பயணிகள் அங்கே தவம் கிடக்கின்றனர்.Image 1513026பொதுவாக ஆஃப்-சீசன் (Off-season) எனப்படும் இந்தக் காலத்தில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் காலியாகக் கிடக்கும். ஆனால், உறைபனியின் மாயாஜாலத்தைக் காண மக்கள் தங்குவதால், சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் வியாபாரிகள், வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடும் குளிரிலும் அவர்களுக்கு இந்த மக்கள் கூட்டம் மனதுக்கு இதமான சூட்டைத் தந்துள்ளது.

நீங்கள் ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டால்...வெறும் ஸ்வெட்டர் மட்டும் போதாது, கையுறை காதுகளை மறைக்கும் மப்ளர் மற்றும் தரமான தெர்மல் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.

படங்கள்;ஒய்.ஜெ.ரகு






      Dinamalar
      Follow us