முதல் முறையாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டாடா 'ஹேரியர் 2026' எஸ்.யூ.வி.,
முதல் முறையாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டாடா 'ஹேரியர் 2026' எஸ்.யூ.வி.,
UPDATED : டிச 31, 2025 08:29 AM
ADDED : டிச 31, 2025 07:38 AM

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஹேரியர் 2026' மாடல் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. டீசல் இன்ஜினில் மட்டுமே வந்த இந்த கார், முதல் முறையாக பெட்ரோல் இன்ஜினில் வந்துள்ளது.
இந்த காரில், இந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 'ஹைபீரியான்' என்ற 1.5 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் வருகிறது. 'சியரா' எஸ்.யூ.வி.,யில் வரும் அதே இன்ஜினாக இருந்தாலும், இந்த காரின் தனி தன்மைக்கேற்ப இன்ஜின் பவர் மற்றும் டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினை, 15 லட்சம் கி.மீ.,க்கு அதிகமாக சோதனை செய்துள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த இன்ஜின், 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, 2 லிட்டர் டீசல் இன்ஜினும் இதில் தொடருகிறது.
காரின் கேபினுக்குள் நுழையும் காற்று மற்றும் இன்ஜின் சத்தத்தை தவிர்க்க கேபின் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 14.5 அங்குல 'ஒ - எல்.இ.டி.,' டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் வசதியுடன் 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டேஷ் கேம் இணைப்பு, அடாஸ் லெவல் - 2 வசதி, 360 டிகிரி கேமரா, முன்புற மற்றும் பின்புற கேமரா வாஷர் வசதி, முன்புற வென்ட்டிலேட்டட் சீட்கள், 6 காற்று பைகள் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.

